ராஜஸ்தானில் குடிபோதையில் வம்புக்கு இழுத்தவரை பாம்பு சரமாரியாக கொத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெய்ப்பூர்,
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் விஷம் தான். இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம் தவ்சா என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மகாவர் என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார். சாலையில் நடந்து சென்ற போது, அவருக்கு குறுக்கே பாம்பு ஒன்று சரசரவென சென்று கொண்டிருந்தது.