இதைப்பற்றி எல்லாம் தெரியாமல் புதிய Aadhaar App-ஐ டவுன்லோட் செய்ய வேண்டாம்!

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) அல்லது UIDAI ஆனது அதன் ஆதார் மொபைல் ஆப்பை அப்டேட் செய்துள்ளது. சேகரிக்கப்படும் தரவின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு யூஐடிஏஐ ஆனது தனது ஆதார் மொபைல் பயன்பாட்டை புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது



இந்த புதிய ஆதார் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் அணுக கிடைக்கிறது, மேலும் அந்தந்த ஆப் ஸ்டோர்ஸ் வழியாக இதை பதிவிறக்கம் செய்யலாம். இந்த அப்டேட் ஆனது அதிக செயல்பாட்டை வழங்கும் என்றும், பழைய ஆப்பை விட பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் யுஐடிஏஐ கூறுகிறது. ஒருவேளை நீங்கள் இந்த புதிய ஆதார் ஆப்பை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், இந்த அப்டேட் சார்ந்த சில முக்கியமான தகவல்களை நீங்கள் அறிந்துகொள்வது கட்டாயமாகிறது!


எம்ஆதார் ஆப் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உடன் வருகிறது. அதாவது இந்த புதுப்பிக்கப்பட்ட mAadhaar ஆப் ஆனது Aadhaar Service Dashboard மற்றும் My Aadhaar section என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆதார் சேவை டாஷ்போர்டு என்பது ஆதார் தொடர்பான அனைத்து ஆன்லைன் சேவைகளின் தொகுப்பாகும், மறுகையில் உள்ள மை ஆதார் செக்ஷன் ஆனது பயனர்கள் தங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட இடத்தை உருவாக்க அனுமதிக்கிறது.