சமீப காலமாக அதாவது இனிமேல் இலவச அழைப்புகள் கிடையாது, கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது அல்லவா?அதை மீட்டெடுக்கும் ஜியோவின் ஒரு முயற்சி தான் இது!
ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் அதன் சந்தாதாரர்களுக்காக புதிய ஆட்-ஆன் ப்ரீபெய்ட் வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.199 ஆகும் மற்றும் இதுவொரு வாராந்திர திட்டம் ஆகும். ஜியோ ஃபைபர் சந்தாதாரர்கள் தங்களிடம் ஆக்டிவ் ஆக இருக்கும் திட்டத்தின் அதிவேக டவுன்லோட் வேகத்தை தீர்த்துக்கொள்ளும் பட்சத்தில் இந்த புதிய ப்ரீபெய்ட் வவுச்சர் ஆனது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இந்த ரூ.199 ஜியோ ஃபைபர் வாராந்திர ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் ஆனது FTTX வீக்லி பிளான்-பிவி-199 என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை தவிர்த்து 100Mbps வேகத்திலான வரம்பற்ற டேட்டா அணுகலை மொத்தம் ஏழு நாட்களுக்கு வழங்குகிறது. ஜிஎஸ்டி உடன் சேர்த்து பார்க்கும் போது இந்த ஜியோ ஃபைபர் திட்டத்தின் விலை ரூ. 234.82 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.